இந்திய உணவு பொதியிடல் நிறுவனம் முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் | தினகரன்

இந்திய உணவு பொதியிடல் நிறுவனம் முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம்

உணவுகளை பொதி செய்யும் மூடியுடன் கூடிய அலுமினியப் பாத்திரங்கள் மற்றும் அலுமினிய ஃபொயில்களை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனம் மீரிகமவில் நிறுவப்படவுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையும் எ.ஆர்.டி அலுமினிய நிறுவனமும் அண்மையில் கைச்சாத்திட்டன.

இந்நிறுவனம் மீரிகமவிலுள்ள ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் ஆரம்பிக்கப்படும். உணவு விற்பனையை பொறுத்தவரை அதிக கிராக்கியுள்ள இந்த அலுமினிய ஃபொயில் மற்றும் மூடியுடன் கூடிய பாத்திரங்கள் தற்போது சீனா போன்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.

எ.ஆர்.டி நிறுவனமானது தற்போது இறைச்சி ரோஸ்ட் செய்யும் பாபிக்கியு தட்டுகள் முதல்

15 வகையான உணவுப் பொதிகளை உற்பத்தி செய்து வருகின்றன.

எ.ஆர்.டி அலுமினிய நிறுவனத்தின் இந்திய முதலீட்டாளர்களான அக்குல் குப்தா, திராஜ் அகர்வால்,ரோஹித் அகர்வால் ஆகியோர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் பங்கெடுத்தனர். இந்நிறுவனத்தின் உள்ளூர் உற்பத்தியாளர்களான நிஷாந்த குணவர்தன மற்றும் ரொஹான் பெர்ணான்டோவும் இதில் கலந்து கொண்டனர். முதலீட்டு ஊக்குவிப்புச் சபை சார்பாக பதில் பணிப்பாளர் நாயகமான ரேணுகா வீர​கோன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இதன்போது அக்குல் குப்தா கருத்து தெரிவிக்கையில், "எமது நிறுவனத்தால் மாதத்துக்கு 250 டொன் அலுமினிய உணவுப்பாத்திரங்களை உற்பத்தி செய்ய முடியும். எமது உற்பத்தி இந்தியா, ஐக்கிய அரபு இராச்சியம், இங்கிலாந்து ஆகிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

அத்துடன் இதில் 20 சதவீதம் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

" எமது நிறுவனம் 125 தொழிலாளர்களைக் கொண்டிருக்கும். எமது அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் சுற்றாடலுக்கு உகந்த வகையில் முன்னெடுக்கப்படும் என்பதற்கு நாம் உத்தரவாதம் வழங்குவோம். எஞ்சிய கழிவுகள் மீண்டும் இந்தியாவுக்கே திருப்பி

அனுபப்படும்," என்றும் அவர் கூறினார்.

இந்நிறுவனம் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் ஆரம்பிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...