Friday, March 29, 2024
Home » டிசம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள்

டிசம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள்

- ரூ. 8,700 மில்லியன் வங்கிகளுக்கு வழங்கி வைப்பு

by Prashahini
December 21, 2023 4:00 pm 0 comment

அஸ்வெசும டிசம்பர் மாத தவணையை செலுத்துவதற்காக 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

1,410,064 குடும்பங்கள் அஸ்வெசும பயனாளி குடும்பங்களாக தற்போது இனம்காணப்பட்டுள்ளன.

இதன்படி, ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கு செலுத்தப்பட்ட மொத்தத் தொகை 51,967 மில்லியன் ரூபாவாகும்.

அஸ்வெசும பயனாளி குடும்பங்களில், 303,199 மிகவும் ஏழ்மையான குடும்பங்கள், 606,496 ஏழ்மையான குடும்பங்கள், 290,624 பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும் 209,745 நடுத்தர குடும்பங்கள் என இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT