ரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது | தினகரன்

ரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது

ரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது-Galle Rathgama 2 Missing-Sub Inspector Arrested by CID

காலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், தென் மாகாண விசேட பிரிவில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 23 இல், குறித்த பகுதியிலுள்ள வர்த்தகர்கள் இருவரை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர், குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்கம, பூஸ்ஸ, ரத்னஉதாகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ரசின் சிந்தக மற்றும் 33 வயதான மஞ்சுள அசேல ஆகிய வர்த்தகர்கள் இருவர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட, குறித்த பிரிவின் பதில் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த டி சில்வாவுக்கு, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பிரிவுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...