Home » உலக அமைதிக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் தகவல் பிரசாரம் செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு

உலக அமைதிக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் தகவல் பிரசாரம் செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு

by Rizwan Segu Mohideen
December 21, 2023 3:01 pm 0 comment

2024 ஜனவரியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சீனாவின் தவறான தகவல் பரப்புரையில் ஈடுபடுவது குறித்து தாய்வான் கவலை தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளில் உள்ள மக்களின் கருத்தை பாதிக்கும் வகையில் சீனா தகவல்களை கையாளுகிறது என்ற சமீபத்திய குற்றச்சாட்டுகள் மீண்டும் தலைப்புச் செய்திகளாக வந்துள்ளன. சீனா தலைமையிலான தவறான தகவல் பிரச்சாரத்தை தாய்வான் கடுமையாக சாடியுள்ளது. இது உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை கையாளவும், சீனாவுக்கு ஆதரவான கருத்துக்களை உருவாக்கவும் தவறான தகவல்களை பரப்பி வருவதாக தாய்வான் மட்டுமன்றி வேறு பல நாடுகள் சீனா மீது குற்றம் சாட்டின. சமீபத்தில், உக்ரைன் நெருக்கடியில் தவறான தகவல் மற்றும் சைபர் தாக்குதல்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் (EU) சீனாவை கடுமையாக விமர்சித்தது. இதே வேளை செச்னியா தனது மக்களை தவறான தகவல் நடவடிக்கைகளால் குறிவைப்பதாக சீனா மீது குற்றம் சாட்டியது.

இதற்காக பீஜிங் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்களை செலவழிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அண்மைய உலகளாவிய தகவல் சுற்றுச்சூழல் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

தாய்வான், அதன் மனித உரிமைகள் நடைமுறைகள், தென் சீனக் கடல், அதன் உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் சர்வதேசப் பொருளாதார ஈடுபாடு போன்ற பிரச்சினைகளில் அதன் விரும்பிய விவரிப்புகளுக்கு முரணான தகவல்களை பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சீனாவின் தவறான தகவல்களின் தந்திரங்கள் ஆழமான போலி வீடியோக்களை உருவாக்கும் அளவிற்கு எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தாய்வான் தனக்கு ஆதரவான ஒருவரை ஆட்சிக்கு கொண்டுவரும் வகையில் இந்த பிரசாரங்களை செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

புகுஷிமா அணுமின் நிலையம் அசுத்தமான நீரை கடலில் கொட்டுவதைப் பற்றிய புகைப்படத்தை சீன உயர்மட்ட தூதர் லிஜியன் ஜாவோ பகிர்ந்துள்ளார். சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியிடும் ஜப்பானின் திட்டத்திற்கு சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) ஒப்புதல் அளித்த நிலையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“உணவுப் பாதுகாப்பின் கதிரியக்க மாசுபாட்டின்” அபாயங்கள் பற்றிய சீனப் பிரச்சாரத்தின் காரணமாக, ஆகஸ்ட் 2023 இல் ஜப்பானிய கடல் உணவுகளின் இறக்குமதிகள் 67.6 சதவிகிதம் சரிந்துள்ளது. இதனால் ஜப்பானுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

தவறான தகவல் பிரச்சாரத்திலும் சீனாவின் முன்னுரிமைப் பட்டியலில் அமெரிக்கா இருப்பதாகத் தெரிகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் உலகையே வாட்டி வதைக்கும் போது, அமெரிக்க உச்சரிப்புடன் கூடிய AI-உருவாக்கப்பட்ட வீடியோ யூடியூப்பில் பதிவேற்றப்பட்டு அது தொடர்பான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய மூலோபாய கொள்கை நிறுவனத்தின் ஆய்வாளர் ஜெசிந்தா கீஸ்ட் கூறுகையில், சீன தவறான தகவல் பிரச்சாரம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகிறது என்றார்.

அமெரிக்காவில் தேர்தலை நோக்கக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை சீனாவில் நீக்கியதாக பிரபலமான Facebook மற்றும் Instagram பயன்பாடுகளை வைத்திருக்கும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா போன்ற நாடுகள் சீனாவின் தவறான பிரச்சாரத்தின் வழக்கமான இலக்குகளாக உள்ளன. சீனாவின் ஏமாற்றும் தவறான தகவல் போரை எதிர்த்துப் போராடுவதற்கு தென் கொரியா அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இருப்பினும், எல்லா நாடுகளும் அதை எதிர்க்கும் திறன் கொண்டவையாக இல்லை. இதனால் அவை பாதிக்கப்படக்கூடியதாக இருக்கும் என்று ஹொ ங்கொங் போஸ் செய்தி கூறிப்பிடுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT