'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு' | தினகரன்

'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'

தபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக் கட்டணங்களை இரட்டிப்பாக்கியதாக முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார் 

ஹிரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் கம்பெரலிய வேலைத்திட்டத்தை  முன்னெடுத்துச் செல்வதற்கான  ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலே  அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு பேசிய அமைச்சர்:தபால் கட்டணத்தை அதிகரித்ததில் எவ்வித அரசியல் நோக்கங்களும் இல்லை.

அமைச்சரவையின் அனுமதியுடனே தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன.

 பாராளுமன்ற உறுப்பினருக்கு  கடந்த காலங்களில் 1,75000வழங்கப்பட்டது. தற்போது 350000வாக இது அதிகரிக்கப்பட்டுள்ளது.   மாகாண சபை உறுப்பினருக்கு வழங்கப்பட்ட 24000ரூபா முத்திரைச் செலவுகள், இப்போது   48000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை இலக்காகக் கொண்டு வழங்கப்பட்ட சலுகைகள் இதுவென, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் டில்வின் சில்வா கூறியிருந்தார். தேர்தலை இலக்காகக் கொண்டு செய்யும் விடயமல்ல இது. பொதுவாக அரச கருமங்களுக்காக மட்டுமே இந்த முத்திரைகளைப் பயன்படுத்த முடியும். அவர்களின் தனிப்பட்ட வேலைகளுக்கு இந்த முத்திரை பயன்படுத்த முடியாது.

கடந்த காலங்களில் தேசிய அரசாங்கத்தை  அமைத்தே மக்களுக்கு சேவைகள் செய்தோம்.  துரதிஷ்டவமாக தேசிய அரசங்கம் இல்லாமற் போய் விட்டது. தற்போது ஒரு அமைச்சரிடம் இரண்டுக்கும் மேற்பட்ட பல அமைச்சுக்கள் உள்ளன. இவற்றை நிர்வகிப்பதில்  பல சிரமங்களை அவர்கள் எதர்நோக்கின்றனர்.

இந்த வேலைப்பளுக்களைக் குறைக்கவே தேசிய அரசாங்கத்தை அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியிலுள்ள அக்குறணை, பூஜாப்பிட்டிய, ஹிரிஸ்பத்துவயிலுள்ள மதஸ்தலங்களுக்கு 3கோடி ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.

குளங்கள்,பாடசாலைகள்,வீதிகளைப் புனரமைக்கவும்,மலசலகூடங்களையும் நிறுவுவதற்கும் நிதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

(மாவத்தகம நிருபர்) 


Add new comment

Or log in with...