Thursday, April 25, 2024
Home » சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை

- அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்

by Prashahini
December 21, 2023 2:37 pm 0 comment

தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவருக்குமான தண்டனை விவரம் இன்று (21) அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்தார்.

நேரடியாகவோ அல்லது காணொலி வாயிலாகவோ பொன்முடி மற்றும் அவரது மனைவி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இருவரும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினார்கள்.

உயர்நீதிமன்றம் அளித்த தண்டனை விவரங்களும் முக்கிய நிகழ்வுகளும் வருமாறு:

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் வயதை கருத்தில் கொள்ள வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ வாதிட்டார். பொன்முடி மருத்துவ அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், பொன்முடியின் மனைவியும் தனது மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என பொன்முடியிடம் நீதிபதி கேட்டார். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று பொன்முடி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இந்த வழக்கின் தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார். இதன்படி பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பொன்முடிக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பொன்முடி, அவரது மனைவியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதால் பொன்முடி தற்போதைக்கு சிறைக்கு செல்ல வேண்டியதில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை பொன்முடி இழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்ததாக சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பொன்முடி தரப்பு முடிவு செய்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடியின் விடுதலை இரத்து

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT