இறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது | தினகரன்

இறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது

இறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில்  கொண்டுசென்ற இருவரை வெலிமடைப் பொலிசார் நேற்று (20-)  கைதுசெய்துள்ளதுடன்,லொறியும்  4பசுக்களும் இதன்போது மீட்கப்பட்டன. 

வெலிமடைப் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து குறிப்பிட்ட பசுக்களை ஏற்றிச் சென்ற லொறியை நிறுத்தி  பொலிஸார் பரீட்சித்தபோது பசுக்கள் இறைச்சிக்காக கொண்டு செல்வது உறுதிசெய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் விசாரணையின் பின்னர்,வெலிமடை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று பொலிசார் தெரிவித்தனர்.  ஆரம்பவிசாரணையில், இப்பசுக்கள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டமை ஊர்ஜிதமாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(பதுளை தினகரன் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...