சுமார் 3 கிலோ தங்கத்துடன் 9 பேர் கைது | தினகரன்

சுமார் 3 கிலோ தங்கத்துடன் 9 பேர் கைது

சுமார் 3 கிலோ தங்கத்துடன் 9 பேர் கைது-9 Suspects Arrested with 3kg Gold Worth Nearly Rs 1.6 Crore

ரூபா ஒன்றரை கோடிக்கும் அதிக பெறுமதி

சுமார் மூன்று கிலோ தங்க நகைகள், மற்றும் தங்க பிஸ்கட்டுகளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) பிற்பகல் துபாயிலிருந்து 4.20 மணியளவில் வந்த UL 303 மற்றும் சிங்கப்பூரில் இருந்து பிற்பகல் 4.50 மணியளவில் வந்த EK 654 ஆகிய இரு விமானங்களிலிருந்தும் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த குறித்த சந்தேகநபர்கள் 9 பேரிடமிருந்தும், சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள பதில் பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்தார்.

சுமார் 3 கிலோ தங்கத்துடன் 9 பேர் கைது-9 Suspects Arrested with 3kg Gold Worth Nearly Rs 1.6 Crore

சுமார் 3 கிலோ (2973.67 கிராம்) நிறை கொண்ட, ரூபா ஒரு கோடி 63 இலட்சத்து 44 ஆயிரத்து 179 (ரூ.16,344,179) பெறுமதியான பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுமார் 3 கிலோ தங்கத்துடன் 9 பேர் கைது-9 Suspects Arrested with 3kg Gold Worth Nearly Rs 1.6 Crore

சந்தேகநபர்கள் மருதானை, நீர்கொழும்பு, சீதுவை, சிலாபம், கண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Add new comment

Or log in with...