மாக்கந்துர மதூஷ் 23 வங்கிகளில் ரூ.1000 கோடிக்கும் அதிக பணம் வைப்பு | தினகரன்

மாக்கந்துர மதூஷ் 23 வங்கிகளில் ரூ.1000 கோடிக்கும் அதிக பணம் வைப்பு

துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், பாதாள உலகக் குழுத் தலைவருமான மாக்கந்துர மதூஷ், இலங்கை மற்றும் துபாயில் 23 வங்கிக் கணக்குகளில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை வைப்பிலிட்டிருப்பதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மூலம் தெரியவந்துள்ளது.  

ஹெரோயின், கொக்கேயின் போன்ற போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் ஒப்பந்தக் கொலைகளை மேற்கொள்வதன் மூலம் பெருந்தொகை பணத்தை மாகந்துர மதுஷ் ஈட்டியிருப்பதாக பொலிஸ் வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ஈட்டப்பட்ட வருமானத்தில் பெரும் பகுதியை கட்டடங்கள் கட்டுவதில் மதுஷ் முதலீடு செய்துள்ளதும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.  

மதுஷ் மற்றும் அவரின் சகாக்கள் துபாயில் கைதுசெய்யப்பட்ட பின்னர் நடத்திய விசாரணைகளில் மதுஷின் சகாவான கஞ்சிப்பானை இம்ரான், கொழும்பில் அமைக்கப்படும் பலமாடி கட்டடத் தொகுதியொன்றில் முதலீடு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.  

அத்துடன் தென்பகுதியில் மதஸ்தலமொன்றுக்கு கட்டடமொன்றை மதுஷ் நன்கொடையாகவும் வழங்கியுள்ளார். இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு பொலிஸார் துபாய் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.  


Add new comment

Or log in with...