ஶ்ரீ லங்கன், மிஹின் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கபீர் ஹஷீம் | தினகரன்


ஶ்ரீ லங்கன், மிஹின் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கபீர் ஹஷீம்

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் அமைச்சர் கபீர் ஹஷீம் முன்னிலையாகியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹஷீம் இன்று (20) முற்பகல் 9.30 மணியளவில் குறித்த ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...