Friday, March 29, 2024
Home » பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவை

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவை

- விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமும் நடைமுறை

by Prashahini
December 21, 2023 9:56 am 0 comment

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சிவில் உடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை (22) முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி நாளை முதல் நீண்ட தூர சேவைகளுக்காக 100 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT