Friday, March 29, 2024
Home » யானை – மனிதன் மோதல்களை குறைக்க நவீன தொழில்நுட்பம்

யானை – மனிதன் மோதல்களை குறைக்க நவீன தொழில்நுட்பம்

வனப்பகுதி எல்லைகளில் வாழ்வோருக்கு உதவிகள்

by Gayan Abeykoon
December 21, 2023 9:50 am 0 comment

யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதால், இதற்கான முன்னோடித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

பிரகாசமான ஒளி, அதிவேக ஒலி அலைகள் மற்றும் டிரோன் விமானங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் இந்த முன்னோடித் திட்டங்கள் அநுராதபுரம், புத்தளம், அம்பாறை மற்றும் யானை – மனித மோதல்கள் அதிகம் காணப்படும் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, வன வளத்தைப் பாதுகாப்பதே வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணியாகும். நான் அமைச்சராக பதவியேற்ற பின்னர், திணைக்களத்தின் செயற்பாடுகள் புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய வனப் பகுதிகளை அண்மித்து வாழும் மக்களின் பாதுகாப்பிற்கான உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

வன வளம் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுப்பதாக அமையும் பட்சத்தில் மக்கள் வனத்தை பாதுகாப்பர். வனப் பகுதிகளின் எல்லையில் வாழும் மக்கள், வனத்திலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய மூலப்பொருட்கள் பல உள்ளன. வனப்பகுதிகளை அண்மித்து வாழ்வோருக்கு மேற்படி மூலப்பொருட்களைத் தேடுவதற்கான அனுமதியை வழங்கும் பட்சத்தில் அவர்களால் வனங்களும் பாதுகாக்கப்படும். பசுமை மேம்பாட்டுத் திட்டங்களும் வலுப்படும். சுற்றுச்சூழலிருக்கும் மூலப்பொருட்களை விற்பனை செய்யும் பட்சத்தில் பெருளவான டொலர்களை ஈட்டிக்கொள்ள முடியும்.இதனால், மாற்றுச் சிந்தனைகளுடன் செயற்பட எதிர்பார்க்கிறோம். நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 29% ஆக காணப்படும் வனங்களைக் கொண்டு முழுமையாக பயனடைவதற்கும், பாதிக்கப்பட்ட வனங்களின் பாதுகாப்புக்காக புதிய மரங்களை நடவும் நடவடிக்கை எடுப்போம். நாட்டிலுள்ள வன வளத்தை மேம்படுத்தும் வகையில் அதற்கு அவசியமான மரக் கன்றுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

வீதிகளின் இரு மறுங்கிளும் மரங்களை நடுவதற்கு அவசியமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரத்துக்கு அவசியமான மரக் கன்றுகளைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். எமது அமைச்சு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 135% இலாபத்தை ஈட்டியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT