தொழிலாளர்களுக்கு ரூ. 50 சம்பள உயர்வு ஒரு சாதனை | தினகரன்

தொழிலாளர்களுக்கு ரூ. 50 சம்பள உயர்வு ஒரு சாதனை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்க ரீதியில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் ஊடாக 20ரூபாய் பெற்றுக்கொடுக்கப்பட்டு தொழிலாளர்களை ஏமாற்றியுள்ள நிலையில், மக்கள் வழங்கிய அரசியல் பலத்தால் வரலாற்றில் முதல் முறையாக வரவு -செலவு திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 50ரூபா வீதம் சம்பளத்தை உயர்த்தி தமிழ் முற்போக்கு கூட்டணி சாதனை படைத்துள்ளது என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.  

அரசாங்கம் வரவு- செலவுத் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட உள்ள ஐம்பது அதே இடத்தைச் சேர்ந்த ஜுனைதீன் நஸ்லிம் சறூக்(35வயது) எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.  

கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி ஹொரவப்பொத்தான நகர்ப்பகுதியில் 1000ரூபாய் 29போலி நாணயத் தாள்களை கடைகளுக்கு விநியோகம் செய்யும் போது மஹதிவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின்படி போலி நாணயத்தாள்களை அச்சிட்டு விநியோகம் செய்த பிரதான சந்தேக நபர் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.  

பிரதான சந்தேக நபரான "ரொட்டவெவ நஸ்லிம்" கைது செய்யப்பட்டதையடுத்து 29ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கைது செய்யப்பட்ட மஹதிவுல்வெவ மூன்று இளைஞர்களுக்கும் தலா 15000ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் சரீரப் பிணையிலும் செல்லுமாறு நீதவான் கட்டளையிட்டார்.  

இதையடுத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கெப்பித்திகொல்லாவ பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பம் இடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.  

அத்துடன் மொரவெவ பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 175000கள்ள நோட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின்படி, இவரே பிரதான சந்தேக நபர் எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.  

இதனையடுத்து பிரதான சந்தேக நபரான "ரொட்டவெவ நஸ்லிம்" மை திருகோணமலை நீதிமன்றத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி ஆஜர்படுத்துமாறும் நீதவான் கட்டளையிட்டார். 

ஹற்றன் விசேட நிருபர்   


Add new comment

Or log in with...