அபிவிருத்தி தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள் | தினகரன்

அபிவிருத்தி தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள்

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் 

இந்த ஆண்டு (2019) தேர்தல் ஆண்டான போதிலும் அனைத்து அரச ஊழியர்களும் நாட்டின் அபிவிருத்தி தேவைகளை இனங்கண்டு அவற்றை எட்டுவதற்கு முன்னுரிமை தரவேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார். “இது தேர்தல் ஆண்டு. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப்போகின்றன?, யார் யாரெல்லாம் அதிகாரத்தை பிடிக்கப்போகிறார்கள்? என்பதைப் பார்த்துக்கொண்டிருந்தால் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படும்” என்று கூறிய ஜனாதிபதி சிறிசேன, நாட்டின் அபிவிருத்தி வேகம் ஏற்கனவே பின்தள்ளியிருப்பதாக குறிப்பிட்டார். எனவே தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த இவ்வருடம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். கிராம சக்தி அமைப்பின் மேல் மாகாண வழிநடத்தல் குழு கூட்டம் கம்பஹா கோல்டன் ரீச் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கூறியவாறு கூறினார்.  

வறியவர்களுக்கு உதவும் நோக்கில் கிராம சக்தி வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. எனவே அரசியல் தலைமைத்துவங்களும் அரசாங்க ஊழியர்களும் கிராம சக்தியின் பயன் கிராம மக்களை சென்றடைய வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.  

வறுமை ஒழிப்பு திட்டங்களை கடந்த 50 வருடகாலமாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் மேற்கொண்டன. எனினும் கிராம சக்தி திட்டம் வறிய மக்களை நேரடியாக இலக்கு வைத்து உருவாக்கப்பட்டதாகும் என்றும்   இந்த திட்டத்தில் அக்கறைகாட்டுமாறு கிராமப்புற வரிய மக்களை தைரியப்படுத்த முடிந்தால் இலக்குகளை எட்டலாம் என்றும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...