Wednesday, April 17, 2024
Home » மாவிலாறு பகுதியிலிருந்து பழைய ஆயுங்கள் மீட்பு

மாவிலாறு பகுதியிலிருந்து பழைய ஆயுங்கள் மீட்பு

by Gayan Abeykoon
December 21, 2023 1:00 am 0 comment

சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிலாறு மதகுக்கு அருகில், பழைய ஆயுதங்கள் சிலவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின்படி, தேடுதல் நடத்தப்பட்டு இவை, மீட்கப்பட்டன.

T-56 துப்பாக்கிக்கான 22 தோட்டாக்கள், இரண்டு மகசீன்கள், இரண்டு கைக்குண்டுகள் மற்றும் T-56 துப்பாக்கியின் ஒரு பகுதி ஆகியவையே மீட்கப்பட்டன.மீட்கப்பட்ட இராணுவ உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT