முந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் | தினகரன்

முந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

புத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17) காலை முந்தல் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்த குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அண்மைய நாட்களில் புத்தளம் மற்றும் அண்மித்த பகுதிகளில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில் இன்றும் இவ்வாறு இந்த ஆர்ப்பாட்டம் புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் முந்தல் நகரில் இடம்பெற்றது.

அறுவாக்காட்டு குப்பை தொட்டி திட்டத்தைக் கண்டித்து சிலாபம் மறை மாவட்டத்திற்குட்பட்ட வைக்கால முதல் எலுவான்குளம் வரையிலுள்ள புத்தளம்-கொழும்பு பிரதான வீதியில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளின் பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றன.

சிலாபம் மறை மாவட்டத்தின் மங்களவெளிக்குட்பட்ட முந்தல் சென் யாகப்பர் ஆலயத்தில் பங்குத் தந்தை அருட் திரு. சமன் கித்திசிறி அடிகளார் தலைமையில் இடம்பெற்ற விஷேட வழிபாட்டின் பின்னர் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் முந்தல் நகருக்குப் பேரணியாக வந்த நூற்றுக்கு மேற்பட்ட கத்தோலிக்க மக்கள் பல்வேறு சுலோகங்களையும் ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

(புத்தளம் விஷேட நிருபர்- எம். எஸ். முஸப்பிர்)


Add new comment

Or log in with...