Thursday, April 18, 2024
Home » கராத்தே சுற்றுப்போட்டியில் புத்தளம் வெற்றி

கராத்தே சுற்றுப்போட்டியில் புத்தளம் வெற்றி

by Gayan Abeykoon
December 21, 2023 10:16 am 0 comment

யம்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற (17) கராத்தே சுற்றுப் போட்டியில் புத்தளத்தை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

21 வயதிற்கு உட்பட்ட காத்தா மற்றும் குமித்தே ஆகிய இரு போட்டிகளிலும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் ஏ.எம். அஸாம் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை பெற்றுள்ளார்.

14 வயதிற்குற்பட்ட குமித்தே போட்டியில் மதுரங்குளி எக்ஸெலன்ஸ் ஆங்கில பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் யூ. தாமீர் தங்கப் பதக்கத்தையும், புத்தளம் காஸிம் சிட்டி பாடசாலை மாணவன் மாஷின் அஹ்மத், 15 வயதிற்குட்பட்ட குமித்தே போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

இந்த மாணவர்களை “டபில்யூ.எஸ்.கே.ஏ.” கழகத்தின் கராத்தே பிரதான போதனாசிரியரான சிஹான் எம். பைரோஸ் பயிற்றுவித்திருந்தார்.

(புத்தளம் தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT