வீடுடைத்து நகை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது | தினகரன்

வீடுடைத்து நகை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது

யாழ். வரணி, இயற்றாலையிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வரணி, இயற்றாலைப் பகுதியில் கடந்த 5ஆம் திகதி அதிகாலை ச்சம்பவம் இடம்பெற்றது. 

வாள், கத்தி, பொல்லுகளுடன் புகுந்த மூவர், தூக்கத்தில் இருந்தவர்களை அச்சுறுத்தி சுமார் ஒரு மணிநேரம் வீட்டைச் சல்லடை போட்டுத் தேடி, நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டனர். 

அத்துடன், அவ்வீட்டில் இருந்த வெளிநாட்டு மதுபானத்தைக் குடித்துவிட்டு மதுபோதையிலும் தடுமாறியுள்ளனர். சம்பவத்தை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் உசாரடைந்ததால், கொள்ளையர்களில் இருவர் பிடிக்கப்பட்டனர். ஒருவர் நகைகள் மற்றும் பணத்துடன் தப்பியோடினார்.  

அவ்வாறு தப்பியோடியவர் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் கொடிகாமம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். 

அவரால் கொண்டு செல்லப்பட்ட கொள்ளையிடப்பட்ட நகைகள் கோப்பாய் பகுதியில் உள்ள ஒருவரிடம் கைமாறியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதே, பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.    

யாழ்.விசேட நிருபர் 


Add new comment

Or log in with...