குச்சவெளி, கல்பிட்டியில் சுற்றுலா வலயங்கள் | தினகரன்

குச்சவெளி, கல்பிட்டியில் சுற்றுலா வலயங்கள்

தெத்துவ, குச்சவெளி மற்றும் கல்பிட்டியில் சுற்றுலா வலயங்களை திறப்பதற்கான இறுதிப் பேச்சுவார்த்தைகள் இவ்வாரம் இடம்பெறவுள்ளன. 

அமைச்சரவையின் கொள்கைத் தீர்மானம் கிடைத்ததும் இந்த சுற்றுலா வலயங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் உபாலி ரத்னாயக்க கூறினார். 

கெத்துல சுற்றுலா வலயம் 1800ஹெக்டெயர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. குச்சவெளி கடற்கரை சுற்றுலாத்தளம் வடகிழக்கு கரையோரப் பகுதியில் 445ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்தக் காணி முதலீட்டாளருக்கு 99வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படும். 

கல்பிட்டி சுற்றுலா வரயம் கல்பிட்டியில் உள்ள 14 தீவுகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளது. இதன் பரப்பளவு 4,133.2 ஏக்கர்களாகும். பாசிக்குடா மற்றும் யாலவில் உள்நாட்டு சுற்றுலா வலயங்கள் அண்மையில் வெற்றிகரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   


Add new comment

Or log in with...