இழுவைப்படகு மீன்பிடியை முற்றாகத் தடுக்க கோரிக்கை | தினகரன்


இழுவைப்படகு மீன்பிடியை முற்றாகத் தடுக்க கோரிக்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெறும் இழுவை படகு மீன்பிடியினை தடுத்து நிறுத்துமாறு வடமராட்சி மீனவர் சங்கமும் மாவட்ட சமாசமும் இணைந்து ஆளுநர் சுரேன் ராகவனிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை நேற்றுமுன்தினம் சமாசத் தலைவர் தவச்செல்வன் வடமராட்சி சமாசத் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் மற்றும் செயலாளர் நற்குணம் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடினர். 

இச்சந்திப்பில், தற்போது இழுவை படகு மீன்பிடிக்கு தடைச்சட்டம் அமுல் படுத்தப்பட்ட நிலையிலும் குடாநாட்டில் 400ற்கும் அதிகமான இழுவை படகுகள் தொழில் புரிகின்றன. இவற்றில் குருநகரில் 300வரையான படகுகளும் மண்டைதீவில் 40 , நெடுந்தீவில் 40படகுகள் வல்வெட்டித்துறையில் 25படகுகள் என 400வரையில் உள்ளன. எனவே இவ்வகை மீன் பிடியினையும் தடை செய்ய வேண்டும் என்றே கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

கலந்துரையாடல் தொடர்பாக வர்ணகுலசிங்கம் கருத்து தெரிவிக்கையில், 

2017ம் ஆண்டு யூன் மாதம் தொழிலிற்கான தடை சட்டம் கொண்டு வரப்பட்டால் அதனை ஏன் நடைமுறைப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அதனை நடைமுறைப்படுத்த மீனவர்களின் பெரும்பான்மை முடிவை அறிந்து அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...