மருதானை பாலத்தில் மோதிய ஜீப் வண்டியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு | தினகரன்

மருதானை பாலத்தில் மோதிய ஜீப் வண்டியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு

வைப்பக படம்

மருதானை பாலத்தில் மோதி, விபத்துக்குள்ளாகிய ஜீப் வண்டியில் இருந்து 68கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இன்று (14) அதிகாலை 3.30 - 4.00மணியளவில் மருதானை புகையிரத நிலையத்திற்கு முன்னாலுள்ள பாலத்தில் மோதி ஜீப் ரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு பொலிசார் விஜயம் செய்த நிலையில் ஜீப் வண்டியில் இருந்த சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த வாகனத்தை சோதனையிட்ட பொலிசார், அதிலிருந்து 68கிலோ கிராம் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா மற்றும் ஜீப் வண்டியை மருதானை பொலிசார் கைப்பற்றியுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...