காதலர் தினம் புதுமைக்கும் பழைமைக்கும் இடையேயான முரண்பாடு | தினகரன்


காதலர் தினம் புதுமைக்கும் பழைமைக்கும் இடையேயான முரண்பாடு

பழைமைவாதிகளுக்கும், புதுமைவாதிகளுக்கும் இடையே அகப்பட்டுக் கொண்டு திண்டாடுகிறது இன்றைய காதலர் தினம்.

பிரதி வருடமும் பெப்ரவரி 14ம் திகதி வந்துவிட்டாலே காதலர்கள் குதூகலமாகி விடுவர். தங்கள் மனம் கவர்ந்தவருக்கு என்ன பரிசு அளித்து அசத்தலாமென்று ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே யோசிக்கத் தொடங்கி விடுவர்.

தற்போதுள்ள கணனி யுகத்தில் உலகெங்கிலுமுள்ள அநேகம் காதலர்கள் தமது காதலர் தின வாழ்த்துக்களை முகநூல், வைபர், வாட்ஸ் அப், ‘ஈ. மெயில்’ போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் பரிமாறிக் கொள்கின்றனர். அத்துடன் காதல் பரிசுகளை நேரடியாகவும், அஞ்சல் மூலமும் சேர்ப்பிக்கின்றனர்.

உலகின் பல நாடுகளில் காதலர் தினத்தை இளம் சோடிகள் குதூகலமாகக் கொண்டாடுகின்ற போதிலும், காதலர் தினத்திற்கு பாகிஸ்தான் உட்பட வேறு சில நாடுகளில் கடும் எதிர்ப்பு நிலவுகின்றது. இந்தியாவில் இயங்கி வருகின்ற மதம் சார்ந்த முன்னணியொன்று 'காதலர் தினம் இனிமேல் வேண்டாம், கன்னிப் பெண்கள் அனைவரும் சகோதரிகள்' என்ற ரீதியில் பிரசாரம் செய்து வருகின்றது. அத்துடன் காதலர்களுக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.

காதலர் தினத்தன்று அவர்களைத் தாக்கி கட்டாயத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. அண்மைக் காலத்தில் பாகிஸ்தானில் காதலர் தினக்கொண்டாட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக பாகிஸ்தான் பல்கலைக்கழகமொன்று அனுஷ்டிக்கத் தீர்மானித்துள்ளது.

புதுமை விரும்பிகளைப் பொறுத்தவரை வலன்டைன்ஸ் தினம் கொண்டாடுவதில் ஆட்சேபம் எதவும் கிடையாது. ஆனால் கலாசார மரபுகளைப் பேணுவோரைப் பொறுத்தவரை காதலர் தினம் என்பது வேண்டத்தகாத ஒன்றாகவே இருக்கின்றது.

அருணா தருமலிங்கம்
வந்தாறுமூலை


Add new comment

Or log in with...