Tuesday, April 23, 2024
Home » ஹம்பாந்தோட்டை இக்ராவில் 10 வருட பூர்த்தி விழா

ஹம்பாந்தோட்டை இக்ராவில் 10 வருட பூர்த்தி விழா

by Gayan Abeykoon
December 21, 2023 6:34 am 0 comment

ம்பாந்தோட்டை இக்ரா ஆரம்ப வித்தியாலயத்தின் பத்து வருட பூர்த்தியை முன்னிட்டு கொண்டாடப்படும் தசம வருடவிழா பாடசாலையின் அதிபர் எம். இஸட். எம். இர்பான் தலைமையில் ஹம்பாந்தோட்டை சிங்கப்பூர் நட்புறவு மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தென் மாகாண கல்வித்திணைக்களத்தின் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம். ஏ. எம். மஷாயிர், ஹம்பாந்தோட்டை கோட்டக் கல்விப்பணிப்பாளர் பிரார்தனா ஜயசூரிய, ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம். எம். எம். ரிஸான், ஹம்பாந்தோட்டை நியூஏசியன் ஹாட்வெயார் உரிமையாளர் நிஸாம் காஸிம், வங்கிகளின் முகாமையாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், தொழில் அதிபர்கள் பாடசாலை அபிவிருத்தி நிர்வாக சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், புத்திஜீவிகள், நலன் விரும்பிகள், பழையமாணவர்கள், பெற்றோர்கள் உட்பட மேலும் பெருந்திரளானோர் கலந்துசிறப்பித்தனர். இந்நிகழ்வில் சாதனையாளர் கௌரவிப்பும் இடம்பெற்று பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டன.

50-1

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT