Friday, April 19, 2024
Home » ‘BOC Sprits awards 2022’ ஊடாக அயராது பாடுபடும் பணியாளர்களை இலங்கை வங்கி கௌரவித்தது

‘BOC Sprits awards 2022’ ஊடாக அயராது பாடுபடும் பணியாளர்களை இலங்கை வங்கி கௌரவித்தது

by Gayan Abeykoon
December 21, 2023 7:12 am 0 comment

BOC Sprits awards 2022 ஊடாக அயராது பாடுபடும் பணியாளர்களை இலங்கை வங்கி கௌரவித்தது. “ஒற்றுமையாக பணியாற்றுவோம் ஒற்றுமையுடன் வெற்றி பெறுவோம்”

இலங்கை வங்கியின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபடும் கிளைகளையும் பணியாளர்களையும் கௌரவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட BOC Sprit awards 2022 வருடாந்த விருது வழங்கல் விழாவானது இலங்கை வங்கியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேராவின் தலைமையில் கொழும்பிலுள்ள ஷங்ரில்லா ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கை வங்கியின் பொது முகாமையாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி ரஸல் பொன்சேக்கா உள்ளிட்ட நிறுவன நிறைவேற்று முகாமைத்துவத்தின் உறுப்பினர்கள், கிளை முகாமையாளர்கள் மற்றும் கிளை பணியாளர்கள் எனப் பலரும் இவ்விருது வழங்கலில் கலந்து கொண்டனர்.

“ஒற்றுமையாக பணியாற்றுவோம் ஒற்றுமையுடன் வெற்றி பெறுவோம்” என்றத் தொனிப் பொருளின் கீழ் நடத்தப்பட்ட இவ்வருடாந்த விருது வழங்கல் விழாவில் நாட்டின் அதிசிறந்த கிளை, 5S எண்ணக்கருவை சிறப்பாக நடைமுறைப்படுத்துகின்ற கிளை மற்றும் பசுமை வீட்டுத் தோட்டத்தினைக் கொண்ட கிளை என மூன்று அதிசிறந்த விருதுகள் வழங்கப்பட்டன. நாட்டின் அதிசிறந்த கிளைக்கான விருதினை இலங்கை வங்கியின் மதுரங்குளிய கிளை பெற்றுக்கொண்டதுடன், இந்நிகழ்வில் மொத்தமாக 46 விருதுகள் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

கிளை செயற்பாடுகளுக்கான பிரதிப் பொது முகாமையாளர் பிரியால் சில்வா அவர்களின் வழிநடத்தலின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

கடினமான தருணங்களிலும் இவ்விருது வழங்கல் விழாவினை நடத்துவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தோம். நாட்டின் அதிசிறந்த கிளை, 5S எண்ணக்கருவை சிறப்பாக நடைமுறைப்படுத்துகின்ற கிளை மற்றும் பசுமை வீட்டுத் தோட்டத்தினைக் கொண்ட கிளை போன்ற பிரிவுகளில் விருதுகளை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டோம். இலங்கை வங்கிக்கு இதுவோர் முக்கியமான மற்றும் விசேடமான விருது வழங்கல் என அடையாளப்படுத்த முடியும்.

கிளை மற்றும் பிரதேச மட்டத்தில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்ற சேவையை கௌரவித்தல் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பை கௌரவித்தல் ஊடாக அவர்களை ஊக்குவித்தலே இதன் நோக்கமாகும். இவ்விருதுகளை பரிந்துரைத்து தேர்வுசெய்வதற்கென விசேடமாக அமைக்கப்பட்ட குழுவானது சிறந்த முறையில் பகுப்பாய்வுசெய்து பிரதான தகுதிகளின் அடிப்படையில் இவ்விருதுகளை முன்மொழிந்துள்ளது.

இலங்கை வங்கியில் பசுமை வீட்டுத்தோட்ட வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்திய கிளைக்கு விருது வழங்கியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

“அயராது அர்ப்பணிப்புடன் பணியாற்றி விருதுகளைப் பெற்றுக் கொண்ட பிரதேச மற்றும் கிளை பணியாளர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்.

இச்செயற்பாட்டின்போது அளப்பரிய சேவையை வழங்கிய தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும், இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என பிரியாஸ் சில்வா இதன்போது தெரிவித்தார். சேவைத் தரம், செயற்திறன் மற்றும் ஆற்றல் என்பவற்றை இவ்வாறான போட்டித்தன்மை மூலமாக உயரிய மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு முழு கிளை வலையமைப்பும் நடவடிக்கை மேற்கொள்ளும் என இலங்கை வங்கி நம்புகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT