Friday, April 19, 2024
Home » அநுராதபுரம் மாவட்டத்தில் HIV நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

அநுராதபுரம் மாவட்டத்தில் HIV நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

by Gayan Abeykoon
December 21, 2023 7:08 am 0 comment

நுராதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் எச்.ஐ.வி நோயாளர்களின் அதிகரிப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். மாவட்டத்தில் இந்த வருடத்தில் 19 எச்.ஐ.வி நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நிமல் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

ரஜரட்ட விஞ்ஞான அறக்கட்டளை நிறுவனம் அண்மையில் ஏற்பாடு செய்த கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் 10 எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் பெண்களுடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரத் தரவுகள் காட்டுவதால் இந்த விடயங்களை பகுப்பாய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், இதற்காக இதுவரையில் அநுராதபுரம் மாவட்டத்தில் இவ்வாறான நோயாளிகளை கண்டறிய சுமார் 41 கிளினிக்குகளை நடாத்த முடிந்துள்ளதாகவும், எவ்வாறாயினும் எச்.ஐ.வி பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்கள் தமது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நிமல் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் பாலின நோய்களுக்கான மருத்துவ நிபுணர்களான டாக்டர் அஜித் கரவிட்ட, டாக்டர் திலானி ரத்னாயக்க, டாக்டர் ஹேமா வீரக்கோன், ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களான அசித்த மலவர ஆராச்சி, சுசித் சிறிவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திறப்பனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT