களு கங்கையை மறித்து இரத்தினக்கல் அகழ்வுக்கு தடை | தினகரன்

களு கங்கையை மறித்து இரத்தினக்கல் அகழ்வுக்கு தடை

களு கங்கையை மறித்து இரத்தினக்கல் அகழ்வுக்கு தடை-Kalu Ganga Gem Mining Banned-Ratnapura

இரத்தினபுரி சமன் தேவாலயத்துக்கு ஆபத்து

களு கங்கையை இடைமறித்து இடம்பெறும் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வுக்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக களுகங்கையை இடைமறித்து இடம்பெற்றுவரும் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வினால் சுற்றாடலுக்கு மாத்திரமன்றி புதைபொருள் பெறுமதி மிக்க இரத்தினபுரி சமன் தேவாலயத்துக்கும் அதன் கட்டடங்களுக்கும் ஆபத்து இடம்பெற்று வருவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வந்தது.

களு கங்கைக்கு அண்மித்தாக அமைந்துள்ள சமன் தேவாலயத்திற்கு சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வினால்  பாரிய பாதிப்பு இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்த போதிலும் பலர் இவ்விடயத்தில் மிகவும் சூட்சுமமாக தொடர்ந்தும் கங்கையை இடைமறித்து சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்தனர்.

இவ்விடயமாக பொறுப்புவாய்ந்தவர்களுக்கு பல முறை அறிவித்தும் இந்த சட்டவிரோத செயல்பாடு இடம்பெற்று வருவதாக பிரதேச பொது மக்கள் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தனர்.

சமன் தேவாலயத்தின் நிர்வாகத்தினால் இரத்தினக்கல் அதிகார சபைக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து சமன் தேவாலயத்தை சுற்றி அமைந்துள்ள களுகங்கை ஆற்றுப் பகுதியில் இது வரை இடம்பெற்று வந்த சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு முயற்சிகளை கட்டுப்படுத்த இரத்தினக்கல் அதிகாரசபை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - பாயிஸ்)


Add new comment

Or log in with...