பாம்பை பயன்படுத்தி சந்தேக நபரை விசாரித்த பொலிஸார் | தினகரன்

பாம்பை பயன்படுத்தி சந்தேக நபரை விசாரித்த பொலிஸார்

இந்தோனேசியக் பொலிஸார் பாம்பை வைத்து ஓர் ஆடவர் விசாரிக்கப்பட்டதை உறுதிசெய்துள்ளது.

அந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய சந்தேகத்தின் பேரில் அந்நபரை, பொலிஸார் கைவிலங்கிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

சந்தேக நபர் பயத்தில் அலற, விசாரணை நடத்திய அதிகாரி சிரித்த காட்சியும் வீடியோவில் இடம்பெற்றிருந்தது. பாம்பு, அவரது தலையையும் இடுப்பையும் சுற்றியிருந்தது.

மேலும் பொலிஸ் அதிகாரி அந்த ஆடவரின் முகத்திற்கு அருகே பாம்பைக் கொண்டுச் செல்வதும் வீடியோவில் தெரிந்தது.

பாப்புவா பகுதியின் பொலிஸார் அந்தச் சம்பவம் தொடர்பில் மன்னிப்புக் கேட்டுள்ளனர். தவறான நடத்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தலைமைக் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.


Add new comment

Or log in with...