பலஸ்தீன தாயக பூமிக்கு நெதர்லாந்து அங்கீகாரம் | தினகரன்

பலஸ்தீன தாயக பூமிக்கு நெதர்லாந்து அங்கீகாரம்

காசா பகுதி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் பலஸ்தீனர்களின் தாயக பூமி என நெதர்லாந்து அரசு அங்கீகாரம் அளிக்கவுள்ளது.

எனினும் பலஸ்தீன நாட்டுக்கு நெதர்லாந்து இன்னும் அங்கீகாரம் அளிக்காத நிலையில் 1948இல் இஸ்ரேல் நிறுவப்பட்ட பின்னர் பலஸ்தீன பகுதிகளில் பிறந்தவர்களின் தாயக பூமியாகவே அது ஏற்றுள்ளது.

இந்த பகுதிகளில் இஸ்ரேலுக்கு இறையாண்மை உரிமை இல்லை என்று நெதர்லாந்து ராஜாங்க செயலாளர் ரெய்மண்ட் நொப்ஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா பொதுச் சபையில் குறைந்தது 136 நாடுகள் பலஸ்தீனத்தை இறைமை கொண்ட நாடு என அங்கீகரிக்கின்றபோதும் பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இஸ்ரேலுடனான இறுதி அமைதித் தீர்வு வரை காத்துள்ளன.


Add new comment

Or log in with...