அட்டாளைச்சேனை 92 நண்பர்கள் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் விளையாட்டு விழா | தினகரன்

அட்டாளைச்சேனை 92 நண்பர்கள் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் விளையாட்டு விழா

அட்டாளைச்சேனை 92 நண்பர்கள் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விடுகை விழா அட்டாளைச்சேனை கடற்கரை விடுதியில் இடம்பெற்றது. நண்பர்கள் கழகத்தின் தலைவர் எம்.ரீ.எம்.சியாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும்,நண்பர்கள் கழகத்தின் போசகருமான ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன்போது சிறுவர்களின் பழுன் உடைத்தல்,யோக்கட் சாப்பிடுதல்,சங்கீதக்கதிரை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் நண்பர்கள் கழகத்தின் போசகரான ஏ.எல்.எம்.நஸீர் பாராளுமன்றம் சென்றமைக்காக அவரது சேவையினைப் பாராட்டி வாழ்த்துப்பத்திரம் நினைவுச்சின்னம் வழங்கி நண்பர்கள் கழகத்தினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரினால் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளரும்,ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளருமான யூ.எம்.வாஹிட்,பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஆசிரியர் எம்.ஜே.அன்வர் நௌசாத் உட்பட நண்பர் கழகத்தின் பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

(படம்: ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...