சமூக சீர்கேட்டை புலப்படுத்தும் பாராளுமன்ற மோதல் சம்பவங்கள் | தினகரன்


சமூக சீர்கேட்டை புலப்படுத்தும் பாராளுமன்ற மோதல் சம்பவங்கள்

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதே மக்களின் விருப்பம். தாமதம் ஏற்படுவதுஅதிகாரத்தில் உள்ள கட்சிக்கே பாதிப்பு என்பது கடந்த கால அனுபவம்​

ஒரு நாட்டின் முன்னேற்றம் மற்றும் அதன் தோல்விகள் ​தொடர்பாகப் பேசக் கூடிய மிகவும் சரியான இடம் அந்நாட்டின் தேசிய தினத்தை அனுஷ்டிக்கும் மேடையாகும். எமது நாட்டின் சாதனைகள் மற்றும் தோல்விகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த மேடையில் கடந்த சுதந்திர தினத்தன்று பறைசாற்றியிருந்தார். நாட்டின் உயர் மட்டத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கிடையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் அமர்ந்திருந்த மேடையிலேயே ஜனாதிபதி தேசிய தின உரையை ஆற்றியிருந்தார். 

ஜனாதிபதியின் மேற்கூறிய தேசிய தின உரையில் இடம்பெற்ற சில கருத்துக்கள் ஒரு சில அரசியல் கட்சிகளுக்கும் ஒரு சில ஊடகங்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு அந்த உரை பல விடயங்களை உணர்த்தியிருந்தது.  

கடந்த நான்கு வருட காலத்தில் நல்லாட்சி அரசாங்கம் பெற்ற வெற்றிகளையும் தோல்விகளையும் ஜனாதிபதி விளக்கியிருந்தார். 

அரசியலமைப்பு பேரவை மற்றும் சுதந்திர ஆணைக்குழுக்களை ஸ்தாபிக்க முடிந்தமை இந்த அரசாங்கத்தின் வெற்றியில் ஒன்றாகும். நீதித்துறை, பொலிஸ் மற்றும் பதவி உயர்வுகள் மற்றும் அரச நிறுவனங்களில் நியமனங்கள், பதவி உயர்வுகள்,இடமாற்றங்கள் சீரான முறையில் இருப்பதை இதன் மூலம் உறுதி செய்ய முடிந்தது. அத்துடன் நியமனங்களின் போது அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதை இதன் மூலம் தடுக்க முடிந்தது. 

19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் நிறைவேற்று ஜனாதிபதிக்கு இருந்த சில அதிகாரங்களை ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பகிர்ந்திருந்தார். 

நாட்டில்  ஓரளவு முன்னேற்றத்தை ஏற்படுத்திய போதும் எம்மால் ஊழலை ஒழிக்க முடியாது போய் விட்டது என்று எமது தேசிய தின உரையில் ஜனாதிபதி கூறினார்.  

"தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் யோசனை பற்றி நான் ஊடகங்களில் இருந்து அறிந்து கொண்டேன்.

ஒரேயொரு உறுப்பினர் மட்டும் இருக்கும் அரசியல் கட்சியுடன் தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதில் என்ன நெறிமுறை இருக்கிறது? வெறுமனே அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே இதனைக் காண முடிகிறது. இந்த தேசிய அரசு யோசனையுடன் நான் இணங்கப் போவதில்லை" என்று ஜனாதிபதி அவரது தேசிய தின உரையில் குறிப்பிட்டார்.

அதேநேரம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது கடந்த ஒன்றரை வருடங்கள் முடியாமல் போயுள்ளது. இது ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட ஒரு சவால் என்றே கூற வேண்டும். 

தேர்தல் நடத்தப்பட வேண்டிய நேரத்தில் அது நடத்தப்பட வேண்டும் என்பதே நாட்டிலுள்ள பெரும்பாலானோரின் விருப்பதாகும். என்ன காரணத்தைக் கூறினாலும் தேர்தல் நடத்துவதை தாமதப்படுத்துவது தமக்கான பிரதிநிதியைத் தெரிவு செய்ய பொதுமக்களுக்கு இருக்கும் உரிமையை மீறுவதாகும். 

தேர்தல்கள் தாமதப்படுத்தப்படும் போது அது அதிகாரத்தில் உள்ள கட்சியையே பாதிக்கிறது என்பதை கடந்த கால அனுபவங்கள் எடுத்துக் காட்டியுள்ளன. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் தேர்தலை 1975இல் இருந்து 1977க்கு ஒத்துவைத்த போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. 8ஆசனங்களை மட்டுமே அந்தக் கட்சி பெற்றது. எதிர்க்கட்சியாக இருக்கும் தகுதியையும் அது முதல் முறையாக இழந்தது. 

1982பாராளுமன்றத்தின் காலத்தை நீடிப்பதற்காக ஜே. ஆர். ெஜயவர்தன சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார். இதன் மூலம் ஆட்சி செய்யும் ஆளுமை அதிகாரத்தை அரசாங்கம் இழந்தது. சர்வஜன வாக்கெடுப்பு ஒரு ஜனநாயகமற்ற தேர்தல் என்று அப்போதைய தேர்தல் ஆணையாளர் கூறியிருந்தார்.

அவ்வாறான சீரற்ற அரசியல் நிலையே 83வன்செயலுக்கும் 1988/89இல் ஒரு இலட்சம் உயிர்களை காவு கொண்ட தென்பகுதி கிளர்ச்சியும் உருவாகக் காரணமாகியது. 

 நாட்டில் 16இலட்சம் அரசாங்க ஊழியர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களது செயற்திறன் 30சதவீதம் மட்டுமே என்று ஒரு ஆய்வு சாட்டுகிறது. ஆனால் அவர்களது செயற்திறன் 70சதவீதமாக இருக்க வேண்டும். இது அந்த அரசாங்க ஊழியர்களின் தவறு அல்ல. அவர்களுக்கு உரிய வழிகாட்டல் வழங்கப்படாததே இதற்குக் காரணமாகும். ஒரு நாட்டிக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதையும், ஒவ்வொருவருக்கும் இருக்கும் பொறுப்புகள் என்னென்ன என்பதையும் மக்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.  "2015முதல் நான் புதிய அரசியல் பயணம் ஒன்றை மேற்கொண்டேன். அது எனக்கு புதிய அனுபவத்தைத் தந்திருக்கிறது. ஒவ்வொரு தடவையும் மக்கள் அரசாங்கத்தை மாற்றியுள்ளனர். ஆனால் அதிகாரத்துக்கு வந்த அரசாங்கங்கள் மக்களின் அபிலாஷைகளை அழித்தே வந்துள்ளன. பாராளுமன்றத்தில் மிளகாய்த் தூள் வீசும் அளவுக்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மோசமாக நடந்து கொண்டுள்ளனர். பாராளுமன்றத்தின் பெருமை களங்கப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் பொலிஸாரை தாக்கியதும் அதற்குள் கத்தியை கொண்டு வருவதும் எவ்வளவு தரமற்ற செயல்கள்!

தற்போது சமூகத்தின் சீர்கேடு எத்தகையது என்பதை பாராளுமன்றம் கண்ணாடி போட்டுக் காட்டுகிறது என்றே மக்கள் பார்க்கிறார்கள். நாட்டின் தலைமைத்துவம் தனிப்பட்ட ஒருவரின் பொறுப்பில் உள்ளது. சமூகத்தின் வசதியில்லாதோர், அப்பாவிகள், விதவைகள் அகதிகள், ஊனமுற்ற சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவ சமூகம் மற்றும் தொழிலாளர்களுக்கு தீமை மற்றும் சுரண்டல் ஏற்படாது பாதுகாப்பது அந்த தனிப்பட்ட ஒருவரிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அது செவ்வனே நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி அவரது தேசிய தின உரையில் குறிப்பிட்டிருந்தார். 

சுகீஸ்வர சேனாதீர


Add new comment

Or log in with...