கொழும்பை அண்டிய பிரதேசங்களில் 21 மணி நேர நீர் வெட்டு | தினகரன்


கொழும்பை அண்டிய பிரதேசங்களில் 21 மணி நேர நீர் வெட்டு

கொழும்பை அண்டிய பிரதேசங்களில் 21 மணி நேர நீர் வெட்டு-21 Hr Water Cut Colombo Suburb

நாளை (13) முற்பகல் 8.00 மணியிலிருந்து கொழும்பை அண்டிய பகுதிகளில் 21 மணி நேர நீ ர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப் பணி காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (13) முற்பகல் 8.00 முதல் நாளை மறுதினம் (14) பிற்பகல் 5.00 மணி வரை, மஹரகம, பொரலஸ்கமுவ, பன்னிபிட்டிய, கொட்டாவ, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே, பாதுக்கை ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு அமுலில் இருக்கும் சபை அறிவித்துள்ளது.

எனவே, பாவனையாளர்கள் தங்களுக்குத் தேவையான  நீரைச் சேகரித்து வைக்குமாறு  தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை கேட்டுக்கொண்டுள்ளதுடன், இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...