தோட்டப்புற மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு | தினகரன்

தோட்டப்புற மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு

மலையக தோட்டப்புற மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்குமென துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.  

தோட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமைச்சர் பழனி திகாம்பரம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கை களுக்கும் தம்மால் இயன்ற ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

மாத்தறை தெனியாய பிரதேசத்தில் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வீடமைப்பு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தோட்டப்புற மக்களுக்கு மட்டுமல்லாது தென் பகுதியிலுள்ள தோட்ட மக்களுக்குத் தேவையான வீடமைப்பு, வசதிகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

காலி மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 200 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.(ஸ)   


Add new comment

Or log in with...