மைத்திரி, மஹிந்த அரசே எதிர்காலத்தில் உருவாகும் | தினகரன்


மைத்திரி, மஹிந்த அரசே எதிர்காலத்தில் உருவாகும்

மைத்திரி- மஹிந்த அரசாங்கமே எதிர்காலத்தில் இலங்கையில் உருவாகுமென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம். பி. உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ. தே. க. வுடன் இணைந்து இனியும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் சென்றால் நாட்டில் எதுவும் மீதமிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்று விதமாக இருந்தாகவும் அதனால்தான் தேசிய அரசாங்கத்தை தொடருவதற்கு முடியாமல் போனதாகவும் தாம் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கும் இதுவே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு முயற்சித்தமை நாட்டின் நலனுக்காகவே என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)


Add new comment

Or log in with...