துருக்கியில் கட்டட விபத்தில் 21 பேர் மரணம் | தினகரன்


துருக்கியில் கட்டட விபத்தில் 21 பேர் மரணம்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.  

துருக்கியின் இஸ்தான்புல் நகரின் கர்தால் மாவட்டத்தில் ஏழு மாடி கட்டடம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மேலும் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக, மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர். 

கட்டட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் சந்தித்து ஆறுதல் கூறினார்.     


Add new comment

Or log in with...