பிரித்தானியாவில் கல்வி வாய்ப்பை வழங்கும் ஹொறைசன் கம்பஸ் | தினகரன்

பிரித்தானியாவில் கல்வி வாய்ப்பை வழங்கும் ஹொறைசன் கம்பஸ்

இலங்கை மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை வழங்கும் வகையில், முன்னணி தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹொறைசன் கம்பஸ், பிரித்தானியாவின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது. 

இந்தப் பங்குடமையானது, சட்டம் மற்றும் தகவல் தொடர்பாடல் துறைகளைத் தேர்வுசெய்யும் மாணவர்களுக்குத் தற்போதைய சந்தைப் போக்குகளுக்கேற்ப பாடநெறிகளைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பை  வழங்குகிறது. 

2011ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஹொறைசன் கம்பஸ் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பட்டத்தை, பிரித்தானியா, அமெரிக்கா, மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து பெற உதவுகின்றது. இப் பல்கலைக்கழகமானது, முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கல்வி மற்றும் சர்வதேச கற்கைநெறிகள் போன்ற கற்கைநெறிகளை அதன் 5வளாகங்களினூடாக வழங்குகின்றது.   

புதிய பங்கான்மை குறித்துக் கருத்துத் தெரிவித்த எசெக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் அந்தனி பொஸ்டர், “ஹொறைசன் போன்றதொரு பெருமை மிகு அமைப்புடன் இலங்கையில் பங்குடமையை 

ஏற்படுத்திக் கொண்டமை மகிழ்ச்சியளிக்கிறது. மாணவர்களை உலகின் பிரஜைகளாக்கி உலகத்தினை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றும் எசெக்ஸ் பல்கலைக்கழக்தின் தொலைநோக்குச் சிந்தனை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தெளிவாக நிரூபணப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார். 

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸ் கருத்துக் கூறுகையில் கல்வியின் முக்கியத்துவம், ஆங்கில மொழியின் முக்கியத்துவம் மற்றும் ஐக்கிய ராச்சியத்துடனான இலங்கையின் கல்வித் தொடர்புகளின் முக்கியத்துவம் என்பன பற்றி விளக்கினார்.  

“தற்போது 700,000 மாணவர்கள் உலகெங்கிலும் உள்ள பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் சர்வதேச ரீதியான கற்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறான சுமார் 20,000 மாணவர்கள் இலங்கையில் இருப்பது எமக்குப் பெருமை சேர்ப்பதாகும்” என்றார்.   


Add new comment

Or log in with...