அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பாரிய சீமெந்து கலவை கப்பல் | தினகரன்

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பாரிய சீமெந்து கலவை கப்பல்

இதாகா பேசன்ஸ் (Ithaca Patience) சீமெந்து கலவை (Slag Cargo) கப்பல் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

21,750மெட்ரிக் தொன் சீமெந்து கலவையுடன் வருகை தந்துள்ள இந்தக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கப்பல் பாதையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் ஊழியர்கள் மிகவும் திறமையாக செயற்பட்டு கப்பலிலிருந்த சீமெந்தை இறக்கிவருவதுடன், நாளொன்றுக்கு 11000மெட்ரிக் தொன் சீமெந்து வீதம் தரையிறக்குவதற்கான வசதிகள் துறைமுக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

காலி துறைமுகத்துக்குச் செல்வதை இலக்காகக் கொண்டிருந்த இப்பாரிய கப்பல் துறைமுகத்தில் போதிய ஆளம் இன்மை காரணமாக ம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வழிமாற்றப்ப ட்டது. 

பாரிய கப்பலின் வருகை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக கப்பல் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திஸ்ஸ விக்கிரமசிங்க “இதுபோன்ற பாரிய கப்பல்கள் வருவது பொருளாதார பலன்கள் மாத்திரமன்றி சிறந்த சேவையை வழங்குவதற்கான அனுபவங்களையும் ஏற்படுத்துகிறது” என்றார். 

ம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் பாரிய கப்பல்களை கையாழ்வதற்கு காணப்படும் வினைத்திறன் காரணமாக எதிர்காலத்தில் தமது சீமெந்து உற்பத்திகளை அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதாக இன்ஸீ சீமெந்து கம்பனியின் மேம்பாட்டு பணிப்பாளர் குசித் குணவர்னசூரிய தெரிவித்தார். 

(ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்) 


Add new comment

Or log in with...