கோலாகலமாக நடந்து முடிந்த சௌந்தர்யா - விசாகன் திருமணம் | தினகரன்


கோலாகலமாக நடந்து முடிந்த சௌந்தர்யா - விசாகன் திருமணம்

எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சௌந்தர்யா, விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது. குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகா் ரஜினிகாந்தின் மகள் சௌந்தா்யா மற்றும் தொழிலதிபா் விசாகன் வனங்காமுடி திருமணம் சென்னையின் பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

கடந்த 8ம் தேதி முதலே திருமணத்திற்கான சம்பிரதாயங்கள் விழாக்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்று நடைபெற்ற காலை போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற ராதா கல்யாண வைபோக நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் அவரது நெருங்கிய சொந்தங்கள் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி நடனம் ஆடிய வீடியோ வைரலானது.

முன்னதாக நேற்று சவுந்தர்யா வீட்டு முறைப்படி போயஸ் தோட்டத்தில் திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந் நிலையில், இன்று விசாகன் வீட்டு முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இன்றைய திருமணத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் மணமகன் விசாகன் சௌந்தர்யாவுக்கு தாலி கட்டினார்.

இன்றைய நிகழ்ச்சியில் சௌந்தர்யா மற்றும் விசாகனின் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சகள்ர் கடம்பூர் ராஜூ, எஸ்.பி வேலுமணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்று மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா 2010ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால் இருவரும் 2016ல் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்கள். பிறகு இருவருக்கும் விவகாரத்து வழங்கப்பட்டது.

இந்நிலையில் செளந்தர்யா மறுமணம் செய்துள்ளார். கோவை முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் சகோதரரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். வஞ்சகர் உலகம் படத்தில் நடித்துள்ளார்விசாகன்.விசாகன் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். அமெரிக்காவில் எம்பிஏ படித்து தமிழ்நாட்டில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

 


Add new comment

Or log in with...