யாழ். அரியாலையில் வேன் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் | தினகரன்


யாழ். அரியாலையில் வேன் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டு பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (11) மாலை 3.10 மணியளவில் யாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்தில் வேன் ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த சந்தேகநபர்களில் இருவர் வீட்டுக்கு வெளியே நின்றுள்ள நிலையில் ஏனைய நான்கு பேரும் உள்ளே நுழைந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்திற்கு பெற்றோல் குண்டு  தாக்குதலை மேற்கொண்டதோடு வீட்டின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி சென்றுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும், சம்பவம் நடந்து ஒரு மணித்தியாலத்திற்கு மேலாகியும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த வீட்டின் கதவானது அண்மையில் இனந்தெரியாத குழுவினரால் தாக்குதலுக்குள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)


Add new comment

Or log in with...