40 வருட நடைபாதை வியாபாரி; வியாபார தலத்திலேயே மரணம் | தினகரன்


40 வருட நடைபாதை வியாபாரி; வியாபார தலத்திலேயே மரணம்

40 வருட நடைபாதை வியாபாரி; வியாபார தலத்திலேயே மரணம்-62 Yr Old Pavement Merchant Dead While on Business

வவுனியாவில் கடந்த 40 வருடங்களாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்ட வியாபாரி ஒருவர் இன்று (11) காலை தனது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முயன்றபோது உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

வவுனியா, இலுப்பையடி, தினச்சந்தைக்கு முன்னாலுள்ள சந்தை சுற்றுவட்ட வீதியில் நீண்ட காலமாக சுமார் 40 வருடங்களுக்கு மேலாக மரக்கறி வியாபாரம் மேற்கொண்டுவரும் வியாபாரி இன்று (11) காலை 6.00 மணியளவில் கடை ஒன்றில் தேனீர் குடித்துவிட்டு தனது நடைபாதை வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முற்பட்டபோது, தர்மலிங்கம் வீதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு முன்னால் சாய்ந்து இருந்த நிலையில் திடீரென்று கிழே வீழ்ந்துள்ளார்.

இதைக் கண்ட ஏனைய வியாபாரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் ஏற்கனவே எடுத்து வரும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

155 ஆம் கட்டை இரணைமடு கிளிநொச்சியைச் சேர்ந்த காளிமுத்து இராமையா (ராஜா) என அழைக்கப்படும் 62 வயதுடைய நடைபாதை வியாபாரியே இன்று (11) காலை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஆரம்ப விசாரணைகளின்போது மாரடைப்பினால் உயிரிழந்திருக்காலம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

(கோவில்குளம் குறூப் நிருபர் - கே. குணா)


Add new comment

Or log in with...