இலங்கை திட்டமிடல் சேவை; நேர்முகப் பரீட்சைக்கு 31 பேர் தகுதி | தினகரன்


இலங்கை திட்டமிடல் சேவை; நேர்முகப் பரீட்சைக்கு 31 பேர் தகுதி

இலங்கை திட்டமிடல் சேவையின் மூன்றாம் தரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்காக நடாத்தப்பட்ட பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்ற 31 பேரின் பெயர்ப்பட்டியலை பொது நிருவாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 

வெளியிடப்பட்ட பட்டியலின் அடிப்படையில் 30 பெரும்பான்மை சிங்கள சமூகத்தவர்களும், ஒரேயொரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரும் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகைமை பெற்றுள்ளனர். 

ரி. ஜயந்தன் (810142214V) எனும் தமிழ் பேசும் நபர் ஒருவர் மாத்திரமே அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேற்படி பரீட்சை 2018 ஏப்ரல் 08 ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை இலங்கை திட்டமிடல் சேவையின் மூன்றாம் தரத்திற்காக நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சை முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.   

(சாய்ந்தமருது குறூப் நிருபர்)   


Add new comment

Or log in with...