இன்று முதல் மூன்று தினங்களுக்கு காற்று | தினகரன்

இன்று முதல் மூன்று தினங்களுக்கு காற்று

இன்று முதல் மூன்று தினங்களுக்கு காற்று-Windy condition is expected

அடுத்த சில நாட்களுக்கு குறிப்பாக இன்று (11) முதல் 13ஆம் திகதி வரை நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கலாம் என, வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடை மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...