வடமாகாணத்தின் சில பகுதிகளில் நாளை 9 1/2 மணி நேர மின்தடை | தினகரன்

வடமாகாணத்தின் சில பகுதிகளில் நாளை 9 1/2 மணி நேர மின்தடை

 

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளின் பொருட்டு நாளை (21) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 9 1/2 மணி நேர மின்சார தடை அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை (21) மு.ப. 8.00 மணி - பி.ப. 5.30 மணி வரை
யாழ்ப்பாணத்தின் பொன்னாலை, காரைநகர், காரைநகர் இராணுவ கடற்படை முகாம், காரைநகர் ஜெற்றி, வடலியடைப்பு, தொல்புரம், சத்தியகாடு, கள்ள வேம்படி, சுழிபுரம், பத்தானை கேணியடி ஆகிய பகுதிகளிலும்,

மன்னார் மாவட்டத்தின் சிறுநாவற்குளம், நாகதாழ்வு, திருக்கேதீஸ்வரம், மாந்தை மேற்கு ஆகிய பகுதிகளிலும்,

வவுனியா மாவட்டத்தின் சாளம்பைக்குளம் பகுதியிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

(செல்வநாயகம் ரவிசாந்)

 


Add new comment

Or log in with...