பொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம் | தினகரன்

பொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம்

Economic Development Center Problem-Sivasakthy Ananthan

- சிவசக்தி ஆனந்தன் எம்.பி.

பொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம் என, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (10) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விட்டு கருத்ததெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர்.

பி.எஸ்.எம். சாள்ஸ் வவுனியா மாவட்ட அரச அதிபராக இருந்தபோது நடைபெற்ற மாவட்ட ஒருங்கினைப்பு குழுகூட்டத்தில் ஓமந்தை பகுதியிலேயே பொருளாதார மத்தியநிலையம் அமைப்பதாக முடிவெடுக்கபட்டது. பின்னர் சில அரசியல்வாதிகளால் தாண்டிகுளத்தில் அதனை அமைக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஓமந்தைக்குகொண்டு செல்லபட்டால் இஸ்லாமிய சகோதர்ர்கள் வழிபடுவதற்கு அங்கு பள்ளிகள் இல்லை எனவே தாண்டிகுளம் பண்ணைதான் சரியான இடம் என்பதில் அவர்கள்  பிடியாக நின்றார்கள்.

அவர்களோடு சேர்ந்து எமது மாகாணசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அது சரி என்று நின்றார்கள். இறுதியில் சம்பந்தர் ஐயா தலைமையில் இவ்விடயம் ஆராயபட்டு வாக்கெடுப்பிற்கு சென்றது.

எனினும் மாவட்ட ஒருங்கினைப்பு கூட்டத்தில் எடுத்த முடிவிற்கு மாறாக வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டாம் என்று நான் அவரிடம் கோரியிருந்தேன். அதனை பொருட்படுத்தாது வாக்கெடுப்பு நடாத்தபட்டு 14 ற்கும் மேற்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் ஓமந்தையில் அமையவேண்டும் என்று வாக்களித்தார்கள். ஒருசிலரே தாண்டிகுளத்தில் அமையவேண்டும் என்று விரும்பினர். எனினும் சம்மந்தன் ஐயா அந்த ஐனநாயக தீர்ப்பிற்கும் மதிப்பளிக்காமையினால் இன்று தமிழ் சிங்கள் கிராமங்களை உள்ளடக்கிய எல்லையில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் பொருளாதார மத்தியநிலையம் அமைக்கபட்டுள்ளது.

குறித்த இடம் காலப்போக்கில் கைமீறி போவதுடன் விவசாயிகளின் நன்மை கருதி கொண்டுவரப்பட்ட திட்டம் ஒரு கட்சி அரசியலிற்கு ஊடாக குறுகிய செயற்பாட்டால் திசைதிருப்பட்டுள்ளது. இதற்கான முழு காரணமும் சம்பந்தன் ஐயாவையே சாரும்.

தற்போது தினச்சந்தை நடாத்துபவர்களில் 14 கடைகளின் உரிமையாளர்கள் குறித்த கடைகளை 15 வருடங்களாக அவர்கள் நடாத்தாமல் குத்தகை அடிப்படையில் வழங்கபட்டிருப்பதாக அறியமுடிக்கின்றது.

உண்மையில் விவாசாயிகள், தோட்ட செய்கையாளர்கள், உழைக்கும் வர்க்த்தினரின் உற்பத்தி பொருட்களை நியாமான விலைக்கு விற்பனை செய்வதற்காகவே இது உருவாக்கபட்டது.

ஏற்கனவே விவசாயிகளிற்கு சந்தைவாய்புகள் இல்லாத நிலை காணப்படுவதுடன் உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காத நிலையும்  இருக்கிறது. எனவே அவர்களுக்கும் கடைகள் ஒதுக்கபட வேண்டும். குறிப்பாக வவுனியாவில் அமைந்துள்ள 8 கமநலசேவை நிலையங்களை மையப்படுத்தி குறைந்த பட்சம் தலா 2 கடைகளையாவது ஒதுக்கி வழங்கினால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்றார்.

(கோவில்குளம் குறூப் நிருபர் - கே. குணா)


Add new comment

Or log in with...