OPPO வின் ‘Find X’ புதிய 5G ஆரம்பநிலை ஸ்மார்ட் போன் | தினகரன்

OPPO வின் ‘Find X’ புதிய 5G ஆரம்பநிலை ஸ்மார்ட் போன்

OPPO வின் ‘Find X’ புதிய 5G தொழில்நுட்பத்துடனான ஆரம்பநிலை ஸ்மார்ட் போன்-OPPO Findx Prototype 5G Mobile

OPPO நிறுவனமானது குவாங்ஸோ நகரில் அண்மையில் நடைபெற்ற China Mobile உலகளாவிய பங்காளர்கள் மாநாட்டில் முதல் முறையாக Find X 5G ஆரம்ப நிலை (Prototype) ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநரும், மிகவும் முக்கியமான பங்காளருமான China Mobile மற்றும் உலகின் துறைசார் பங்காளர்களுடன் இணைந்து புதிய 5G சூழல் நிலையமைப்பினை (ecosystem) விருத்தி செய்யவுள்ளதாக OPPO அறிவித்துள்ளது.

OPPO வின் ‘Find X’ புதிய 5G தொழில்நுட்பத்துடனான ஆரம்பநிலை ஸ்மார்ட் போன்-OPPO Findx Prototype 5G Mobile

கடந்தாண்டின் முந்தைய பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட OPPO Find X Prototype ஸ்மார்ட் போன் ஆனது, ஸ்மார்ட் போன் துறையில் முழுத்திரை போக்கினை (Fullscreen) ஏற்படுத்த வழிவகுத்தது. இந்த Find X இன் அறிமுகத்துடன் OPPO ஆனது, வளர்ந்துவரும் நாடுகளில் அதிக பாவனையாளர்களை சென்றடையக்கூடிய வகையில் மேலைத்தேய ஐரோப்பிய சந்தையில் உத்தியோகபூர்வமாக கால்தடம் பதித்தது.

Snapdragon 855 மாதிரி மற்றும் X50 5G ஐ கொண்ட OPPO Find X 5G ஸ்மார்ட் போன்யானது, மிகச்சிறந்த செயல்பாட்டினை வழங்குவதுடன், உலகளாவிய பங்காளர்கள் மாநாட்டில் பெரும்பாலான வருகையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்த அறிமுக நிகழ்வின் போது, உலகின் முன்னனி இலத்திரனியல் மதிப்பீட்டு நிறுவனமான OPPO, Qualcomm மற்றும் Keysight டெக்னாலொஜிஸ் Inc. ஆனது, Find X 5G Prototype ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி உலாவல், ஒன்லைன் வீடியோ மீள்அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பு உள்ளடங்கலாக 5G பயன்பாடுகள் மற்றும் 5G தரவு இணைப்பு குறித்து விளக்கமளித்தது.

OPPO வின் ‘Find X’ புதிய 5G தொழில்நுட்பத்துடனான ஆரம்பநிலை ஸ்மார்ட் போன்-OPPO Findx Prototype 5G Mobile

இந்த மாநாட்டில் உரையாற்றிய OPPO சீன வர்த்தகத்தின் தலைவரும், உலகளாவிய உப தலைவருமான பிரயன் ஷென், “2019 ஆம் ஆண்டில் வர்த்தக ரீதியான 5G ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்;திய முதல் நிறுவனங்களில் ஒன்றாக OPPO உள்ளதென நாம் நம்புகிறோம்."

"5G சகாப்தத்தில் முன்னோடியாக திகழும் OPPO ஆனது, 2015 இன் ஆரம்பத்திலிருந்தே 5G தரங்கள், உற்பத்தி ஆய்வு மற்றும் அபிவிருத்தி மற்றும் பயன்பாடுகளின் ஆய்வு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததுடன், முன்னோடியான சாதன தெரிவுகளை வெளியிட்டுள்ளது."

"2018 மே மாதம் உலகில் முதல்முறை ஒளி தொழில்நுட்பத்தினால் கட்டமைக்கப்பட்ட 5G முப்பரிமாண வீடியோ அழைப்பினை பூர்த்தி செய்ததுடன், “Ubiquitous Reality” கருப்பொருளினை முன்மொழிந்திருந்தது. அதன் பின்னர் ஓகஸ்ட் மாதம் OPPO ஆனது, உலகின் முதலாவது ஸ்மார்ட் போன்யில் 5G சமிக்ஞை மற்றும் தரவு இணைப்புகளை பூர்த்தி செய்ததுடன், ஒக்டோபர் மாதம்  ஸ்மார்ட் போனில் 5G இணைய அணுகல் சோதனையை பூர்த்தி செய்த முதலாவது நிறுவனமாக திகழ்கிறது.

அதன் அண்மைக்கால 5G மைல்கல்லாக, நவம்பர் 30ஆந் திகதி OPPO ஆனது 5G  வலையமைப்பு ஊடாக ஸ்மார்ட் போனில் உலகின் முதலாவது பல்தரப்பு வீடியோ அழைப்பினை ஏற்படுத்தியிருந்தது” என்றார்.

நீண்டகால எதிர்பார்ப்புடன் OPPO ஆனது, அனைத்தையும் இணைத்தல் மற்றும் ‘அனுபவமே தலைவன்’ எனும் சகாப்தமாக 5G+ சகாப்தம் உருவாகும் எனும் நம்பிக்கையுடன் “5G+” கருப்பொருனை அறிமுகம் செய்துள்ளது. 5G வலையமைப்பு ஊடாக அனைத்தையும் இணைக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களின் பரந்துபட்ட தெரிவுகளின் மையமாக இந்த ஸ்மார்ட் போன் அமையும்.

‘புத்திசாலித்தனமான ஆரோக்கியம்’ மற்றும் ‘புத்திசாலித்தனமான முகப்பு’ ஆகிய பிரிவுகளை அடையாளப்படுத்தும் வகையில், OPPO ஆனது, ஏற்கனவே 5G மற்றும் அதிசிறப்பான தொழில்நுட்பங்களின் குறுக்குவெட்டினை ஆராய்தல் மற்றும் ஒட்டுமொத்த துறையுடனும் இணைந்து 5G புதுமையான சூழல்நிலையமைப்பை கட்டியெழுப்பல் போன்றவற்றுக்காக பல்வேறு ஸ்மார்ட் போன்கள் மீது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என ஷென் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் OPPO ஆய்வு நிறுவகத்தின் தலைவர் லெவின் லூ மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஸ்மார்ட் போன்கள் மற்றும் திறன் சாதனங்களை உண்மையிலேயே ‘அறிவார்ந்த தனிப்பட்ட உதவியாளர்கள்’ ஆக உருவாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவு மற்றும் ஊடழரன கணினி (5G+ ABC) போன்றவற்றுடன் இணைந்து 5G மேம்பாடு நோக்கி செயற்படவுள்ளது.

பயனர்களுக்கு வியத்தகு அனுபவங்களை வழங்கிடும் வகையில் எதிர்காலத்தில் 5G பயன்பாட்டு காட்சிகள் மற்றும் 5G பயன்பாடுகள் ஆகியவை விருத்தியடையும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.

5G சூழல் நிலையமைப்பினை கட்டியெழுப்பும் வகையில் OPPO ஆனது, தொடர்ச்சியாக Qualcomm வலையமைப்பு  உட்கட்டமைப்பு உற்பத்தியாளர்கள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மற்றும் ஏனைய விநியோக பங்காளர்கள் ஆகியோருடனான ஒருங்கிணைப்பை ஆழமாக்கவுள்ளது.

சீனாவில் 5G சாதனங்களை வர்த்தகமயமாக்குதல் மற்றும் China Mobile இன் ‘5G சாதன ஆரம்ப முன்முயற்சி’ ஊடாக 5G துறைக்கான புதிய சூழல் நிலையமைப்பை கட்டியெழுப்பல் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்காக China Mobile உடன் இணைந்து OPPO செயற்படவுள்ளது.

சீனாவிற்கு வெளியே வர்த்தக 5G உற்பத்திகளை இவ்வருடம் அறிமுகப்படுத்தும் திட்டத்துடன் ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய வெளிநாட்டு சந்தைகளிலுள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் OPPO பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.


Add new comment

Or log in with...