வடிவேலுவிற்காக காத்துக்கொண்டிருக்கும் திரைப்பட இயக்குநர்கள்! | தினகரன்


வடிவேலுவிற்காக காத்துக்கொண்டிருக்கும் திரைப்பட இயக்குநர்கள்!

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கும் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு வடிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாதியிலேயே நின்றது.

இதையடுத்து இப்படத்தின் பிரச்சினை முடியும் வரை, வேறு எந்தவொரு படத்திலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிற்கு ரெட் கார்ட் போட்டது.

இதற்கிடையே இப்பிரச்சனை விரைவில் முடியும் என்றஎதிர்பார்ப்பில் சில இயக்குனர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்தவரிசையில் இயக்குனர் சுராஜ் நீண்ட நாட்களாக வடிவேலுவிற்காக காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமல், பார்த்திபன், வடிவேலு நடிக்க இவர் இயக்கும் புதிய படத்தின் முதல்கட்டப் பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராக இருக்கும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் இன்னும் வடிவேலு பிரச்சினை தீராததால், தன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முடியாமல் இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சுராஜ் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Add new comment

Or log in with...