கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகத்தின் புதிய தவிசாளராக எம்.எஸ். உதுமாலெப்பை | தினகரன்

கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகத்தின் புதிய தவிசாளராக எம்.எஸ். உதுமாலெப்பை

கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகத்தை செயற்திறன் மிக்க பணியகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகத்தின் புதிய தவிசாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகத்தின் புதிய தவிசாளராக நியமிக்க்கப்பட்டுள்ள எம்.எஸ். உதுமாலெப்பை கடந்த வியாழக்கிழமை (07) மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகத்தின் தலைமையகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகத்தின் முன்னாள் தவிசாளர் பொன் செல்வநாயகம் உட்பட அதன் பணிப்பாளார்கள், மாவட்ட பணிப்பாளர்கள், அதிகாரிகள் சமய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகத்தை செயற்திறன் மிக்க பணியகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

கிழக்கு மாகாணத்தில் பாலர்களின் கல்விக்காக அவர்களின் மேம்பாட்டுக்காக உழைப்பதுடன் பாலர்பாடசாலை ஆசிரியர்களின் பிரச்சினைகள் மற்றும் பாலர் கல்வியின் அபிவிருத்தி என்பவற்றில் கூடுதலான கரிசணை எடுப்பேன் எனவும் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த பதவியின் மூலம் கிழக்கு மாகாணத்தில் பாலர் பாடசாலைகளை முன்னேற்றுவதற்கும் சிறுவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காகவும் பயன் படுத்துவேன் என மேலும் தெரிவித்தார்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...