டயலொக் சம்பியன்ஸ் லீக் பட்டத்துக்கு நான்கு அணிகளுக்கிடையில் கடும் போட்டி | தினகரன்

டயலொக் சம்பியன்ஸ் லீக் பட்டத்துக்கு நான்கு அணிகளுக்கிடையில் கடும் போட்டி

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள முதல்தர கால்பந்து கழகங்களுக்கிடையிலான2018ஆம் ஆண்டுக்கானடயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரில் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவதற்கு நான்கு கழகங்களுக்கிடையில் கடுமையான போட்டி நிலவுகின்றது.

இதன்படி,கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகிய இம்முறை போட்டித் தொடர் கடந்த காலங்களை விட பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், 2018 பருவகலாம் நிறைவு பெறுவதற்கு இன்னும் இரண்டு போட்டிகள் மாத்திரம் எஞ்சியுள்ளன.

இதன்படி, இம்முறை சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுகின்ற அணியைத் தீர்மானிக்கின்ற விறுவிறுப்பான எட்டுபோட்டிகள் நடைபெறவுள்ளன.

தொடர்ச்சியாக மூன்று தடவைகள் சம்பியன் பட்டத்தைவென்ற அணியாக வலம் வந்து கொண்டிருக்கின்ற கலம்போ எப்.சிஅணி, இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள அதேநேரம், கடந்தவருடம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட றினோன் கழகம்,எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

அதேபோல, இம்முறைபோட்டிகளில் கலம்போ எப்.சி கழகத்தை,நிகம்போயூத் கழகம் வீழ்த்தியிருந்ததுடன்,அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்திடம் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளடிபெண்டர்ஸ் கழகம் தோல்வியைத் தழுவியதும் இங்குகவனிக்கத்தக்கது.

மேலும்,புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள புளூ ஸ்டார் கழகம், 6ஆவது இடத்தில் உள்ள ரெட் ஸ்டார்ஸ் கழகத்திடம் தோல்வியைத் தழுவியது பரவலாகப் பேசப்பட்டன.

இதன்படி,புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் உள்ள நேவி சீஹோக்ஸ் கழகம் (30 புள்ளிகள்), மாத்தறை சிட்டி கழகத்தைஅதன் சொந்த மைதானத்தில் (09) எதிர்த்தாடவுள்ளது.

29 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளநடப்புச் சம்பியனான கலம்போ எப்.சிகழகத்துக்கும்,டிபெண்டர்ஸ் எப்.சிகழகத்துக்கும் இடையிலான போட்டி கொழும்பு சுகததாஸ மைதானத்தில் மின்னொளியில் நடைபெறவுள்ளது.

இம்முறைபோட்டிகளில் பலசர்ச்சைகளைஏற்படுத்தியகளுத்துறை புளூ ஸ்டார் (29 புள்ளிகள்) கழகத்தை,குருநாகல் பெலிகன்ஸ் கழகம் புனிதஆனாள் மைதானத்தில் (09) சந்திக்கவுள்ளது.

எனவே, இன்று நடைபெறவுள்ளபோட்டிகளில் நேவி சீஹோக்ஸ் மற்றும் புளூ ஸ்டார் ஆகியகழகங்களுக்குவெற்றிவாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும்,கலம்போ எப்.சிக்கும்,டிபெண்டர்ஸ் எப்.சிக்கும் இடையிலானபோட்டியில் கடும் போட்டிநிலவும் எனஎதிர்பார்க்கப்படுகின்றது. எனினும்,எஞ்சியுள்ள இரண்டுபோட்டிகளையும் வெற்றிகொள்ளும் அணிக்குசம்பியன் பட்டத்தை இலகுவாககைப்பற்றமுடியும்.

இந்தநிலையில்,நேவிசீஹோக்ஸ் கழகம் மாத்திரம் வெற்றிபெற்று 3 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டால் அந்தக் கழகம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெறும். அதேநேரம், புளூ ஸ்டார் மற்றும் டிபெண்டர்ஸ் கழகங்கள் தோல்வியைத் தழுவினால் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு அவ்விருகழகங்களுக்கும் இல்லாமல் போகும்.

அதேபோல,நேவி சீஹோக்ஸ் மற்றும், புளூ ஸ்டார் ஆகியகழகங்கள் தோல்வியைத் தழுவி கலம்போ எப்.சிகழகம் வெற்றிபெற்றால் புள்ளிகள் பட்டியலில் இதேநிலை மை காணப்படும்.

மறுபுறத்தில் புளூ ஸ்டார் கழகம் தோல்வியைத் தழுவி, நேவிசீஹோக்ஸ் மற்றும் கலம்போ எப்.சி ஆகியகழகங்கள் வெற்றிபெற்றால் இந்த இரு அணிகளுக்கும் இடையில் சம்பியன் பட்டத்துக்கான மோதல் ஏற்படும்.

இதுஇவ்வாறிருக்க ,டிபெண்டர்ஸ் கழகமும், புளூ ஸ்டார் கழகமும் வெற்றி பெற்று,நேவி சீஹோக்ஸ் அணி தோல்வியைத் தழுவினால் அல்லது நான்குஅணிகளும் பங்குபற்றியபோட்டிகள் சமநிலையில் முடிவடைந்தால் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் அணி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் தீர்மானிக்கப்படும்.

போட்டிகள் சமநிலை அடைந்தால் ஒவ்வொரு அணிகளுக்கும் தலா ஒருபுள்ளிகள் வீதமும் வழங்கப்படும்.

இந்த நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள இறுதிலீக் போட்டியில் நேவிசீஹோக்ஸ் கழகம்,கலம்போ எப்.சி கழகத்தையும், புளூ ஸ்டார் கழகம், டிபெண்டர்ஸ் கழகத்தைஎதிர்த்தாடவுள்ளது.

இம்முறைபோட்டிகளில் 15 ஆட்டங்களில் பங்குபற்றி 10 தோல்விகளை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ள முன்னாள் சம்பியனான நிகம்போயூத் கழகம், தரமிறக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

எனினும், இம்முறைபோட்டிகளில் கலம்போ எப்.சிகழகத்தை, நிகம்போயூத் கழகம் வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். அத்துடன், தரமிறக்கப்படுகின்ற அடுத்தகழகம் தொடர்பில் இதுவரைஎந்த வொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனிடையே இம்முறை போட்டிகளில் சம்பியன் பட்டத்தைவெல்லும் அணிக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்குவதற்கு போட்டி ஏற்பாட்டுக் கு ழுநடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(பீ.எப்.மொஹமட்)


Add new comment

Or log in with...