இலங்கையின் பிரபல நீச்சல் வீரர் ஜெரம் போலிங் மரணம் | தினகரன்

இலங்கையின் பிரபல நீச்சல் வீரர் ஜெரம் போலிங் மரணம்

இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரர்களில் ஒருவரான ஜுலியங் போலிங்கின் சகோதரரான ஜெரம் போலிங், நேற்றுமுன்தினம் (07) காலமானார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ஜெரம் போலிங், பாடசாலை காலத்திலிருந்து நீர்நிலைப் போட்டிகளில் அதிக திறமை கொண்டவராக இருந்தார். அத்துடன்,வோட்டர் போலோ விளையாட்டின் மூலம் தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்திய அவர், அலைச் சறுக்கல் விளையாட்டிலும் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

பாய் மர படகோட்டம் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்த ஜெரம் போலிங், தனது வாழ்க்கையின் இறுதி காலத்தை அந்த விளையாட்டுடன் கொண்டு சென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

2014ஆம் ஆண்டு 17 அடி உயரம் கொண்ட பாய்மரக் கப்பல் மூலம் சுமார் ஒரு மாதகாலம் இலங்கை பூராகவும் பயணம் செய்து புதிய சாதனையொன்றையும் அவர் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பீ.எப் மொஹமட்)


Add new comment

Or log in with...