மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி | தினகரன்

மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி

71வது சுதந்திர தினத்தன்று உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தின் சம்மாந்துறை கிளை ஏற்பாடு செய்த உள்ளக மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி கல்வி நிறுவகத்தின் மைதானத்தில் இடம்பெற்றது.

மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு இங்லிஷ் லையன்ஸ் அணியினரும், ஷைபர் ரேமினேட்டர்ஸ் அணியினரும் தெரிவாகினர்.

சுற்றுத் தொடரில் நாணய சுழற்சியில் ஷைபர் ரேமினேட்டர்ஸ் அணி வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பாட்டத்தை தெரிவுசெய்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய இங்லிஷ் லையன்ஸ் அணியினர் இரண்டு விக்கட் இழப்பிற்கு 70ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஷைபர் ரேமினேட்டர்ஸ் அணியினர் 6விக்கட்டுக்களை இழந்து 50ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டு இராண்டாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.

நடைபெற்ற சுற்றுத் தொடரில் ஆட்ட நாயகனாக இங்லிஷ் லையன்ஸ் அணியின் வீரர் எம்.ஏ.அஸ்ரப் தெரிவு செய்யப்பட்டதுடன், தொடராட்டநாயகனாக ஷைபர் ரேமினேட்டர்ஸ் அணியின் வீரர் றிக்காஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

குறித்த போட்டியில் வெற்றிபெற்ற, இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட அணிகளுக்கான வெற்றிக்கேடயத்தை இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவகத்தின் பணிப்பாளர் முஸ்தபா மற்றும் விரிவுரையாளர்கள் இணைந்து வழங்கிவைத்தனர்.

மேற்படி சுற்றுத் தொடரில் நான்கு அணிகள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் மத்திய விசேட நிருபர்


Add new comment

Or log in with...