Thursday, March 28, 2024
Home » கீரி சம்பாவுக்குப் பதிலாக 50,000 மெ.தொ GR 11 அரிசி

கீரி சம்பாவுக்குப் பதிலாக 50,000 மெ.தொ GR 11 அரிசி

தனியாருக்கு இறக்குமதி அனுமதி

by gayan
December 20, 2023 7:02 am 0 comment

கீரி சம்பா அரிசிக்குப் பதிலாக 50,000 மெற்றிக் தொன் GR 11 ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் உணவுக்

கொள்கைக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உள்ளூர் சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசியின் விலையை போட்டியாக வைத்து, நுகர்வோருக்கு விலை அனுகூலத்தை வழங்கும் நோக்கில் இந்த அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT